சென்னை | சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை | சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
Updated on
1 min read

சென்னை: மதுர​வாயல் பகு​தி​யில் வசித்த கூலித்​தொழிலா​ளிக்கு 3 மகள்​கள் உள்​ளனர். பெற்​றோர் வேலைக்கு செல்​லும் நேரங்​களில் அந்த சிறுமிகள் தங்​களது பாட்​டி​யின் கண்​காணிப்​பில் வீட்​டில் இருப்​பது வழக்​கம்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி​யி்ல் 14 வயது மூத்த மகளை, அப்​பகு​தி​யில் வசித்த 21 வயது இளைஞர் காதலிப்​ப​தாக ஆசை வார்த்தை கூறி, தனது வீட்​டுக்கு அழைத்​துச் சென்​று வீட்​டில் அடைத்து வைத்து பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார்.

தனது மகளை காண​வில்லை என சிறுமி​யின் தந்தை போலீ​ஸில் புகார் கொடுத்​தார். போலீ​ஸார் தேடிய நிலை​யில், அந்த சிறுமி வெகு நேரத்​துக்கு பிறகு வீடு திரும்​பி​யுள்​ளார்.

நடந்த சம்​பவம் குறித்து விசா​ரித்த பெற்​றோர், இது தொடர்​பாக போலீ​ஸில் புகார் அளித்​தனர். அதன்​பேரில் திரு​மங்​கலம் அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து இளைஞரை போக்சோ சட்​டத்​தின்​கீழ் கைது செய்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எஸ்​.பத்மா முன்​பாக நடந்​தது. அப்​போது அரசு தரப்​பில் சிறப்பு குற்​ற​வியல் வழக்​கறிஞர் எஸ்​.அனிதா ஆஜராகி குற்​றத்தை நிரூபித்​தார்.

அதையடுத்து நீதிப​தி, சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை விதித்​துள்​ளார். மேலும், பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்​சத்தை இழப்​பீ​டாக வழங்​க​வும் உத்​தர​விட்​டுள்​ளார்​.

சென்னை | சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
பணம் தர மறுத்ததால் தாத்தா, பாட்டி கொலை: போதைக்கு அடிமையான பேரன் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in