குறைந்த விலையில் தங்கம் என ரூ.20 கோடி மோசடி: பெண் காவல் ஆய்வாளர் மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: குறைந்த விலை​யில் தங்​கம் தரு​வ​தாக பண மோசடி நடை​பெற்ற விவ​காரத்​தில் பெண் காவல் ஆய்​வாளர் மீதும் வழக்கு பதி​யப்​பட்​டுள்​ளது. இந்த மோசடி​யில் போலீஸ் அதி​காரி​களும் பணத்தை இழந்​துள்ள தகவல் வெளி​யாகி உள்​ளது.

சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்​வாள​ராக பணி​யாற்​று​பவர் ஷீலா மேரி. இவர் தங்​கத்​தில் முதலீடு செய்​தால் அதிக லாபம் சம்​பா​திக்​கலாம்.

குறைந்த விலை​யில் தங்​கக் காசுகள் வாங்​கித் தரு​கிறோம் என்பன உள்பட 3 வகை​யான நகை முதலீட்டு திட்​டங்​களை உறவின​ரான பிரபு மணி மூல​மாக அறி​முகம் செய்​துள்​ளார்.

கடந்த 2023 மற்​றும் 2024-ம் ஆண்டு வரை சுமார் 200-க்​கும் மேற்​பட்​டோர் பிரபு மணி நடத்தி வந்த நிறு​வனத்​தில் முதலீடு செய்​துள்​ளனர். பிரபு மணி பெரும்​பாலும் ஆய்​வாளர் ஷீலா மேரி​யின் காவல்​துறை வாக​னத்​திலேயே வைத்​து, மக்​களவை தேர்​தல் நேரத்​தில் தங்​கக் காசுகளை வழங்​கி​யுள்​ளார்.

இதனால் நம்​பிக்கை ஏற்​பட்டு நூற்​றுக்​கும் மேற்பட்​டோர் முதலீடு செய்​துள்​ளனர். குறிப்​பாக போலீ​ஸாரும், போலீஸ் அதி​காரி​கள் பலரும் கோடிக்​கணக்​கில் பணத்தை முதலீடு செய்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், இந்​நிறு​வனத்தை 2024 இறு​தி​யில் மூடி​விட்டு பிரபு மணி தலைமறை​வாகி விட்​டார். இதனால், இவரிடம் சுமார் ரூ.20 கோடி வரை முதலீடு செய்து ஏமாற்​றப்​பட்​ட​வர்​கள் பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸாரிடம் புகார் அளித்​தனர்.

இதையடுத்​து, பிரபு மணி கைது செய்​யப்​பட்​டார். இந்த வழக்​கில் தற்​போது பெண் காவல் ஆய்​வாளர் ஷீலா மேரி மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அவரிடம் போலீஸ் அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதனிடையே, இந்த விவ​காரம் தொடர்​பாக காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​வின் பேரில் சென்னை போலீ​ஸாரும் தனி​யாக விசா​ரித்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
திருத்தணி | சிறுவனை கொன்று புதைத்தது தொடர்பாக 2 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in