சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்: 2 இளைஞர்கள் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்: 2 இளைஞர்கள் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.2 கோடி மதிப்​புள்ள உயர்ரக கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது. தாய்​லாந்​தில் இருந்து கஞ்​சாவை கடத்தி வந்த 2 இளைஞர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

தாய்​லாந்து தலைநகர் பாங்​காக்​கில் இருந்து தாய் ஏர்​வேஸ் பயணி​கள் விமானம் சென்​னைக்கு நேற்று வந்​தது. அந்த விமானத்​தில் வந்த பயணி​களை​யும், அவர்​களின் உடைமை​களை​யும் சுங்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை செய்​தனர்.

அப்​போது,கேரள மாநிலத்​தைச் சேர்ந்த 28 வயது ஆண் பயணி மீது அதி​காரி​களுக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது. சுற்​றுலா விசா​வில் தாய்​லாந்து சென்று வந்த அவரது உடைமை​களை சோதனை செய்த போது, ரூ.1 கோடி மதிப்​புள்ள 900 கிராம் உயர்ரக பதப்​படுத்​தப்​பட்ட ஹைட்​ரோ​போனிக் கஞ்சா மறைத்து வைத்​திருந்​ததை கண்​டு​பிடித்​தனர்.

இதையடுத்​து, கஞ்​சாவை பறி​முதல் செய்த அதி​காரி​கள் அவரை கைது செய்து விசா​ரணை நடத்​தினர். அவர் கொடுத்த தகவலின்​படி, தாய்​லாந்​தில் இருந்து சென்னை வந்து கொண்​டிருந்த லயன் ஏர்​வேஸ் விமானத்​தில் இருக்​கும் பயணி​களை தீவிர சோதனை செய்ய முடிவு செய்​தனர்.

அந்த விமானம் சென்னை வந்​ததும், பயணி​களை​யும், அவர்​களின் உடைமை​களை​யும் அதி​காரி​கள் சோதனை செய்​த​போது, சுற்​றுலா விசா​வில் தாய்​லாந்து சென்று வந்த கேரள மாநிலத்​தைச் சேர்ந்த இளைஞர் ரூ.1 கோடி மதிப்​புள்ள 900 கிராம் உயர்ரக பதப்​படுத்​தப்​பட்ட ஹைட்​ரோ​போனிக் கஞ்சா இருந்​ததை கண்​டு​பிடித்​தனர்.

இதையடுத்​து, கஞ்​சாவை பறி​முதல் செய்த அதி​காரி​கள், அவரை​யும் கைது செய்​தனர். வி​சா​ரணை​யில் இரு​வரும் கடத்​தல் குருவி​களாக செயல்பட்டது தெரியவந்தது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்: 2 இளைஞர்கள் கைது
கொளத்தூரில் ஸ்டாலின் தோல்விக்கு சேகர்பாபு தான் காரணம்: முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in