டாஸ்மாக் லாரி டெண்டர் பெற்று தருவதாக ரூ.25 லட்சம் வசூல்: தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது

கார்த்திகேயன், சதீஷ்குமார்

கார்த்திகேயன், சதீஷ்குமார்

Updated on
1 min read

விருதுநகர்: டாஸ்​மாக் லாரி டெண்​டர் தொடர்​பாக அருப்​புக்​கோட்​டை​யில் அமைச்​சர் பெயரைக் கூறி, ரூ.25 லட்​சம் வசூலித்த தவெக நகர செய​லா​ளர்​கள் 2 பேரை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

விருதுநகர் மாவட்​டம் அருப்​புக்​கோட்டை தவெக நகரச் செய​லா​ளர் கார்த்​தி​கேயன், மேற்கு நகரச் செய​லா​ளர் சதீஷ்கு​மார். இவ்​விரு​வரை​யும் தொடர்​பு​கொண்ட அருப்​புக்​கோட்​டையைச் சேர்ந்த சில நபர்​கள், தங்​களுக்கு டாஸ்​மாக் குடோனிலிருந்து மதுக்​கடைகளுக்கு பாட்​டில்​களை ஏற்​றிச் செல்​லும் லாரி டெண்​டர் எடுத்​துக் கொடுக்​கு​மாறு அணுகி​யுள்​ளனர்.

அதற்​கு, மது​விலக்கு மற்​றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்​சர் விக்​னேஷிடம் கூறி, அந்த டெண்​டரை பெற்​றுத் தரு​வ​தாக​வும் அதற்கு பணம் தர வேண்​டும் என்​றும் இரு​வரும் தெரி​வித்​துள்​ளனர்.

அதன்​படி, லாரி டெண்​டர் பெற்​றுத் தரு​வதற்​காக ரூ.25 லட்​சம் வரை 2 பேரும் வசூல் செய்​துள்​ளனர். இந்த விவ​காரம் தொடர்​பாக அமைச்​சர் விக்​னேஷ் கவனத்​துக்கு கட்​சி​யினர் சிலர் கொண்டு சென்​றுள்​ளனர்.

இதையடுத்​து, இச்​சம்​பவம் தொடர்​பாக அமைச்​சர் விக்​னேஷ் தரப்​பிலிருந்து விருதுகர் மாவட்ட குற்​றப்​பிரிவு போலீ​ஸாரிடம் புகார் தெரிவிக்​கப்​பட்​டது. அதன் அடிப்​படை​யில் மாவட்ட குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து தவெக நகர செய​லா​ளர்​கள் கார்த்​தி​கேயன், சதீஷ்கு​மார் ஆகியோரை நேற்று கைது செய்​தனர். அவர்​களிடம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>கார்த்திகேயன், சதீஷ்குமார்</p></div>
“இந்தியாவின் அதிவேக வளர்ச்சிக்கு இளைஞர் சக்தியே முக்கிய காரணம்” - பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in