குளித்தலை அருகே இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 ஓட்டுநர்கள் உயிரிழப்பு

குளித்தலை அருகே இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 ஓட்டுநர்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 ஓட்டுநர்களும் உயிரிழந்தனர். இவ்விபத்தில் இரு லாரிகளின் பின்னால் வந்த இரு கார்கள் லாரிகள் மீது மோதி முன்பகுதி சேதமடைந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில இருந்து திருப்பூர் மாவட்ட்ம காங்கேயத்திற்கு நெல் ஏற்றிக்கொண்டு நேற்றிரவு லாரி ஒன்று புறப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முதல் சேர்த்தி ஜீவா காலனியை சேர்ந்த மேகநாதன் (37) லாரியை ஓட்டி வந்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள குமாரமங்கலம் அருகேயுள்ள தனியார் காஸ் பங்க் அருகில் இன்று (ஆக.26) அதிகாலை 4.40 மணிக்கு லாரி வந்தப்போது கரூரில் இருந்து எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் சம்பவ இடத்திலேயே நெல் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் மேகநாதன், எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற மயிலாடுதுறை சேந்தமங்கலம் துர்க்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கோபிகிருஷ்ணன் (48) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் இரு லாரிகளின் பின்னால் வந்த இரு கார்கள் லாரிகள் மீது மோதி முன்பகுதி சேதமடைந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குளித்தலை தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் கிரேன் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கிய இரு ஓட்டுநர்களின் உடல்களை மீட்டனர்.

குளித்தலை போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்துக்குள்ளான வாகனங்களை கிரேன் உதவியுடன் போலீஸார் அப்புறப்படுத்தினர். விபத்தால் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குளித்தலை அருகே இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 ஓட்டுநர்கள் உயிரிழப்பு
“3 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் தமிழக அரசு இனியும் விலகி நிற்கக்கூடாது” - அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in