ஆளுநர் கான்வாயில் பைக்கில் நுழைந்த 2 பேர் கைது

ஆளுநர் கான்வாயில் பைக்கில் நுழைந்த 2 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி திரு​வான்​மியூரில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றார். பின்​னர் அங்​கிருந்து கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கைக்கு காரில் புறப்​பட்​டுச் சென்​றார்.

அவரது காருக்கு முன்​னும், பின்​னும் காவல் துறை​யின் பாது​காப்பு வாக​னங்​கள் சென்​றன. அவரது கார், அடை​யாறு புற்​று​நோய் மருத்​து​வ​மனை அருகே செல்​லும்​போது பைக் ஒன்று திடீரென அத்​து​மீறி நுழைந்து ஆளுநர் காரை பின் தொடர்ந்து சென்​றது.

ஆளுநருக்கு பாது​காப்​புக்​காக சென்ற காவல் துறை வாக​னங்​களை​யும் முந்​திச் சென்​றது. இதைப் பார்த்து அதிர்ச்​சி​யடைந்த போலீ​ஸார், அவர்​கள் இரு​வரை​யும் பிடிக்க முயன்​றனர்.

ஆனால் இரு​வரும் பைக்​கில் வேக​மாக சென்​ற​தால், போலீ​ஸா​ரால் பிடிக்க முடிய​வில்​லை. இதையடுத்து போலீ​ஸார் ஆளுநர் மாளிகை முன் நின்று கொண்​டிருந்த போலீ​ஸாருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்து அந்த பைக்​கு​களை பிடிக்க உத்​தர​விட்​டனர். அதன்​படி அத்​து​மீறிய இரு​வரை​யும் போலீ​ஸார் பிடித்​து, கிண்டி காவல்நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர்.

விசா​ரணை​யில் அவர்​கள் கள்​ளக்​குறிச்​சி​யைச் சேர்ந்த அன்​பு​ராஜ் (22), விழுப்​புரத்​தைச் சேர்ந்த ஜீவா (22) என்​பதும், இரு​வரும் பெருங்​களத்​தூர் பகு​தி​யில் தங்​கி​யிருந்து தனி​யார் நிறு​வனத்​தில் வேலை செய்​வதும், விடு​முறை தினம் என்​ப​தால் அடை​யாறுக்கு வந்​ததும், அங்​கிருந்து மது அருந்​தி​விட்டு பெருங்​களத்​தூருக்கு புறப்​பட்​டதும் தெரிய​வந்​தது.

மேலும் அடை​யாறு புற்​று​நோய் மருத்​து​வ​மனை பகு​தி​யில் நடை​பெற்ற வாகன சோதனை​யில் போலீ​ஸாரிடம் பிடிப​டா​மல் இருப்​ப​தற்​காக ஆளுநர் வாகன அணிவகுப்​புக்​குள் அத்​து​மீறி நுழைந்​திருப்​பதும், ஆளுநர் வாகன அணிவகுப்​புக்​குள் சுமார் அரை கிலோ மீட்​டர் பயணித்​திருப்​பதும் தெரிய​வந்​தது. இதையடுத்​து போலீ​ஸார்​ இரு​வரையும் கைது செய்தனர்.

ஆளுநர் கான்வாயில் பைக்கில் நுழைந்த 2 பேர் கைது
சென்னை | டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in