

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரித்தனர். அப்போது அவர்கள் பைக்கில் இருந்த மூட்டையை வீசி தப்பி சென்றனர். இதையடுத்து, ஒருவரை மடக்கி பிடித்த போலீஸார், பெண் புள்ளி மான் ஒன்றை கொன்று மூட்டையில் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது.
இதையடுத்து, மாமல்லபுரம் போலீஸார் மற்றும் திருக்கழுக்குன்றம் வனத்துறையினர் புள்ளி மான் உடலை மீட்டனர். மேலும், இதுதொடர்பாக வெண்புருஷம் பகுதியை சேர்ந்த கோகுல் (27) என்பவரை திருக்கழுக்குன்றம் வனத்துறை ரேஞ்சர் ராஜேஷ் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்த சத்யா (25) என்ற நபரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.