

மதுரை: மதுரை செக்கானூரணியில் செயல்படும் அரசு சமூகநீதி விடுதியில் ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் முதலாமாண்டு பயிலும் 15 வயது மாணவரை, அதே ஐடிஐ-ல் பயிலும் 17 வயதுடைய 3 மாணவர்கள் நிர்வாணப்படுத்தி ராகிங் செய்து, அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் தரப்பில் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மதுரை, தேனியைச் சேர்ந்த 3 மாணவர்களை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். மேலும், அந்த விடுதியின் வார்டன் பாலமுருகனை தொழிற்கல்வித் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.