

திருப்புவனம்: தனிப்படை போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த காவலாளி அஜித்குமார் வழக்கு தொடர்பாக திருப்புவனம் போலீஸார் நேற்று மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மடப்புரம் கோயிலில் ஒப்பந்த காவலாளியாகப் பணியாற்றியவர் அஜித்குமார்.
இவர் மீது கோயிலுக்கு வந்த திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியர் நிகிதாவின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகை யைத் திருடியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அஜித்குமாரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை செய்தபோது தாக்கியதில் அவர் ஜூன் 28-ல் உயிரிழந்தார்.
இதையடுத்து உயர் நீதிமன்ற அமர்வு, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்து ஜூலை 8-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகி றது. நேற்று திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், மடப்புரம் கோயில் பணியாளர்களான கண்ணன், பெரிய சாமியிடம் விசாரணை நடத் தினார். தொடர்ந்து மற்ற ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற இருக்கிறது.