போதைப் பொருள் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு

போதைப் பொருள் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு
Updated on
1 min read

சென்னை: போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஶ்ரீகாந்த் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்தை கடந்த ஜூன் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். இதே வழக்கில் நடிகர் கிருஷ்ணா, போதை பொருள் சப்ளையர் கெவின் ஆகியோர் 26-ம் தேதி கைது செய்யப்பட்டனர். 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, இருவர் தரப்பிலும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல் குமார் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in