

சென்னை: ராயப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் இருப்பவர் ரவுடி சீனு(27). இவர் மீது கொலை முயற்சி உள்பட 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் வழக்கு ஒன்றில் சீனு காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவரை ராயப்பேட்டை போலீஸார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.
அவரை சிறையில் அடைப்பதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேற்று மதியம் அழைத்துச் சென்றனர். அப்போது, இயற்கை உபாதையை கழிக்க வேண்டும் என கூறி கழிவறை சென்ற சீனு, போலீஸாரின் கவனத்தை திசை திருப்பி அங்கிருந்து தப்பினார். இதையடுத்து, அவர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 2 தனிப்படை அமைத்து சீனுவை போலீஸார் தேடி வருகின்றனர்.