சென்னை | ஆயிரம் விளக்கில் மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை | ஆயிரம் விளக்கில் மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
Updated on
1 min read

சென்னை: கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில்,சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மசூதியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் மின்னஞ்சல் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து சென்னைகாவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அண்ணா சாலை போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடம் சென்று சோதனை நடத்தினர். அதில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எனவே, புரளியை கிளப்பும் வகையில் மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த விவகாரம் குறித்து சென்னை சைபர் க்ரைம் போலீஸாரும் தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். விமானம், ரயில், பேருந்து நிலையங்கள், கல்வி கூடங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதை யாரும் நம்ப வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in