மாங்காடு சக்தி நகர் பகுதியில் காஸ் சிலிண்டர் வெடித்து 7 பேர் காயம்

மாங்காடு சக்தி நகர் பகுதியில் காஸ் சிலிண்டர் வெடித்து 7 பேர் காயம்
Updated on
1 min read

மாங்காடு: மாங்காட்டை அடுத்த சக்தி நகர் பகுதியில் குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டின் கீழ் பகுதியில் சிறிய வீட்டில் வட மாநிலத்தை சேர்ந்த ரிஸ்வான் என்பவர் அவரது தந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ரிஸ்வான் அவரது அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தீயை அணைக்க முடியாததால் வெளியே வந்தனர். சத்தம் கேட்டதும் வீட்டின் உரிமையாளர் குமார் மற்றும் எதிர் வீட்டில் வசிக்க கூடியவர்கள், அவரது உறவினர்கள் என அனைவரும் அங்கு ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் அதிக அளவில் காஸ் கசிவு ஏற்பட்டு, சிலிண்டர் திடீரென வெடித்து, அறை முழுவதும் தீ பரவியது.

இதனால் வீட்டின் சுவர் மற்றும் கதவுகள் உடைந்து விழுந்த நிலையில் அங்கு சென்ற சிறுவர்கள் உட்பட ஏழு பேருக்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சிலிண்டரை அப்புறப்படுத்தினர். மாங்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in