திருவள்ளூர் அருகே டிஜே இசை மேடையில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் பலி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அரண்வாயில் பகுதியில் டிஜே இசை மேடையில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த தண்ணீர் குளம் அருகே உள்ள தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் தீனா (16). இவர் திருவள்ளூர் அருகே அரண்வாயில் பகுதியில் உள்ள தனியார் விழா அரங்கில் நேற்று இரவு (செப்.23) நடந்த பிறந்த நாள் விழாவில், தண்டலம் பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் நடத்திய டிஜே இசை நிகழ்ச்சியை பார்க்கச் சென்றார்.

இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது மழை பெய்தது. அதனால், மேடையில் இருந்த டிஜே இசைக் கருவிகளை எடுத்து வைக்கும் பணியில் தமிழ்வாணன் உள்ளிட்டோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, டிஜே இசை மேடையில் இருந்த மின்சார வயரை தவறுதலாக தீனா மிதித்ததில், எதிர்பாராதவிதமாக மின் வயரில் கசிந்த மின்சாரம் அவரைத் தாக்கியது. இதனால், மேடையில் இருந்து தீனா தூக்கி வீசப்பட்டார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in