ஐபிஎஸ் போல் சுற்றிய 18 வயது இளைஞன் பிஹாரில் கைது

ஐபிஎஸ் போல் சுற்றிய 18 வயது இளைஞன் பிஹாரில் கைது
Updated on
1 min read

பாட்னா: பிஹாரின் ஜமூய் மாவட்டம் சிக்கந்தரா சவுக் பகுதியில் இளைஞன் ஒருவர் தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு சுற்றித் திரிந்துள்ளார். சந்தேகப்பட்டு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் அந்த இளைஞனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் அந்த இளைஞரின் பெயர் மிதிலேஷ் மாஞ்சி (18) என்பதும் மனோஜ் சிங் என்பவரிடம் ரூ.2 லட்சம் கொடுத்து ஐபிஎஸ் அதிகாரிக்கான சீருடை மற்றும் கைத்துப்பாக்கி பெற்றதும் தெரியவந்தது. மேலும் போலீஸ் வேலைக்கு பணகொடுத்து ஏமாந்தது தெரிய வந்தது.

இந்த குற்றச் செயலில் மிதிலேஷ் மாஞ்சி, மனோஜ் சிங் மற்றும் தொடர்புடைய சிலரை சிக்கந்தரா போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in