வங்கிக் கடன் தவணை கேட்டு மிரட்டல்: ஊறுகாய் வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி @ மதுரை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை | கோப்புப்படம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை | கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: தனியார் வங்கியில் வாங்கிய கடனுக்கான தவணையைக் கேட்டு ஊழியர் மிரட்டியதால் மதுரையில் ஊறுகாய் வியாபாரி குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே ஊராண்ட உரப்பனூர் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி - ஜீவஜோதி தம்பதியினர் 2 ஆண்டுகளாக ஊறுகாய் கம்பெனி நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தனியார் வங்கியில் ரூ.2.5லட்சம் கடன் வாங்கியதற்கான 2 மாத தவணையை கட்டாத நிலையில், நேற்று வீடு தேடிவந்து பணம் வசூலிக்க வந்த ஊழியர் ஒருவர் உடனே தவணை பாக்கியை கட்ட கூறியுள்ளார்.

இதில் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது 14 வயது மகன்,12 வயது மகள்களுடன் அந்தத் தம்பதியினர் குருணை மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in