மதுரையில் தங்கையை கொன்ற வழக்கில் திடீர் திருப்பம்; மேலும் மூவர் கைது

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை: மதுரையில், அண்ணனே தங்கையைக் கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக, கொலையான பெண்ணின் சகோதரி, அப்பெண்ணின் கணவர், அண்ணன் மகன் உள்ளிட்ட மேலும் 3 மூவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாநகர் கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி (36). திருமணமான இவர், இன்னொரு நபருடன் திருமணத்தைத் தாண்டிய உறவிலிருந்துள்ளார். இது தொடர்பாக திலகவதியைக் கண்டித்த அவரது அண்ணன் தமிழ்ராஜ், தங்கை தான் சொன்னதைக் கேட்காததால் கடந்த 6-ம் தேதி திலகவதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

இந்தக் கொலை தொடர்பாக தமிழ்ராஜ் கைதுசெய்யப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக, திலகவதி கொலையில் அவரது அக்காள் தமிழ்ச்செல்வி திலகவதியின் கணவர் கண்ணன், தமிழ்ராஜ் மகன் அஜித்குமார் உள்ளிட்டோரும் கூட்டுச் சேர்ந்து ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் கொலை சம்பவத்தில் இந்த உண்மை வெளியானதை அடுத்து, அவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in