சென்னையில் ஒரே வாரத்தில் 16 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

சிறை
சிறை
Updated on
1 min read

சென்னை: சென்னையில் கடந்த ஒரே வாரத்தில் 16 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 22 முதல் 28-ம் தேதி வரையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், திருட்டு, நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என 16 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் கூறுகையில், “பொது மக்களின் நலனே முக்கியம். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in