சென்னை | தொடர்ந்து 3-வதாக பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி: 9 நாள் குழந்தையை கொன்ற தந்தை கைது

ராஜ்குமார்
ராஜ்குமார்
Updated on
1 min read

சென்னை: சென்னை வியாசர்பாடி, சுந்தரம் 4-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவரது மனைவிவிஜயலட்சுமி. இத் தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் இவர்களுக்கு 3-வதாக மீண்டும்பெண் குழந்தை பிறந்துள் ளது. இதனால், ராஜ்குமார் விரக்தி யில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி, குழந்தையை தூங்க வைத்து விட்டு தாய் விஜயலட்சுமி வீட்டின் வெளியேஅமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். திடீரென குழுந்தையின் அழுகுரல் கேட்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது குழந்தையின் வயிற்றில் 3இடங்களிலிருந்து ரத்தம் வெளியேறியது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக குழந்தையை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. பின்னர், பிரேத பரிசோ தனை முடிவடைந்து பெற்றோரிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, குழந்தைக்கு ஏற்பட்ட காயம் குறித்து மருத்துவர்கள்சந்தேகம் எழுப்பி இதுகுறித்து விசாரிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் குழந்தையின் தாய் விஜயலட்சுமியிடம் விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின்முரணாகப் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் வயிற்றில் கூர்மையான ஆயுதத்தால் குத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந் தது. எனவே, குழந்தை கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட் டது. இறுதியில் குழந்தையின் பெற்றோரை தனியாக அழைத்து போலீஸார் விசாரித்தனர். இதில் குழந்தையின் தந்தை ராஜ்குமாரே கத்தரிக்கோலால் 3 முறை குழந்தையை குத்தி கொலை செய்தது உறுதி யானது.

தாய்க்கு எச்சரிக்கை: அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், 3-வது ஆண்குழந்தை பிறக்கும் என எண்ணிய நேரத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் அக்குழந்தையை கொலை செய்ததாக ராஜ்குமார் தங்களிடம் வாக்குமூலமாக கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, அவரைபோலீஸார் கைது செய்தனர். மேலும் கொலையை மறைக்க முயன்ற ராஜ்குமாரின் மனைவி விஜயலட் சுமியை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in