

சதீஷ்குமார், ரமேஷ், கார்த்திக்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தனியார் வங்கிக் கிளை ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 430 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வங்கிக் கிளையில் இருந்து 430 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதில் கையாடல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் நடந்த விசாரணையில் வங்கியில் பணிபுரியும் சிலர் போலியாக கையொப்பமிடுதல் உட்பட பல்வேறு வழிமுறைகளில் ரூ.1 கோடியே 21 லட்சத்து 61 ஆயிரத்து 685 ரூபாய் பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது.
ப்ரியா, எஸ்.பிரசாந்த், ஆர்.பிரசாந்த்
இதுதொடர்பான புகாரின் பேரில் வங்கியில் கடன் அதிகாரியாக பணிபுரிந்த சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த முள்ளுவாடியை சேர்ந்த வெங்கடேசன் மகன் கார்த்திக் (34), கடன் மேலாளரான ஆத்தூர் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சீமராஜா மகன் சதீஷ்குமார் (37), விற்பனை அதிகாரிகளாக பணியாற்றிய வி.பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் எஸ்.பிரசாந்த் (27), தென்கீரனூரை சேர்ந்த ஆர்.பிரசாந்த் (28), காசாளரான கள்ளக்குறிச்சி சிறுவங்கூரை சேர்ந்த ரமேஷ் (33), ஆவணப்பதிவாளர் பெரும்பட்டை சேர்ந்த வினோத் மனைவி ப்ரியா (29) ஆகியோரை கைது செய்தனர்.