வீரமணி வீட்டின் நீச்சல் குளத்தையும் தோண்ட திட்டம்

வீரமணி வீட்டின் நீச்சல் குளத்தையும் தோண்ட திட்டம்
Updated on: 
1 min read

சென்னை: வீரமணி வீட்​டில் சிறுமிகளின் உடல் புதைக்​கப்​பட்டதா என அவரது வீட்​டு நீச்சல் குளத்தை தோண்டி சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சிறுமிகள் பாலியல் வன்​கொடுமை வழக்​கில், ஜெம் வீரமணி கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அவருடன் 9 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதில் கைதான பாலாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று முன்​தினம் வீரமணி வீட்டில் ​தோட்​டம் உள்ள பகுதி​யில் 10 அடி ஆழத்துக்​கு தோண்​டி சோதனை நடத்தப்பட்டது. இதில் உடல் பாகங்​கள் எது​வும் கிடைக்​கவில்லை.

இதையடுத்து, பாலா கூறியதன்பேரில் நீச்​சல் குளம் உள்ள இடத்தை தோண்டி மீண்​டும் சோதனை நடத்த போலீ​ஸார் திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

வீரமணி வீட்டின் நீச்சல் குளத்தையும் தோண்ட திட்டம்
ஆண்டுதோறும் 400 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

X