

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேரும் சரணடைய மார்ச் 13 வரை அவகாசத்தை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஸ்வத்தாமன், ஹரிஹரன் உள்ளிட்ட 12 பேருக்கு ஏற்கெனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கியிருந்த ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், மார்ச் 6-ம் தேதிக்குள் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஜாமீன் ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதால், சரணடைய 4 வாரம் காலஅவகாசம் வழங்கக் கோரி அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், அனைவரும் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கான அவகாசத்தை மார்ச் 13 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அதுவரை விசாரணை நீதிமன்றத்தில் காலையில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதித்துள்ளார்.