

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி, தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பாஜக அரசுக்கு சாதகமாக, எஸ்ஐஆர் என்ற போர்வையில் ஜனநாயகத்தை, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் படுகொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி, அவர் பதவி விலக வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தலைமையில் சென்னை அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு, எம்பிக்கள் விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில், முன்னாள் எம்பி செல்லக்குமார், தேசிய செயலாளர் அறிவழகன், மாநில பொருளாளர் ரூபி மனோகரன், பொது செயலாளர் எம்.சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது: எஸ்ஐஆர் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளார்.
மகாத்மா காந்தி பல்வேறு போராட்டங் களை தமிழகத்திலிருந்து தான் தொடங்கினார். அவர் வழியில் ராகுல் காந்தியும் தமிழகத்தை மையமாக வைத்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னை மாவட்ட தலைவர்கள் கராத்தே செல்வம், எம்எம்டிஏ கோபி, ஜோதி, பொன்னம் பலம், திலகர், விஜய் தனசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.