தமிழகத்தில் ஒரே வாரத்தில் 1,155 ரவுடிகள் கைது: போலீஸார் சிறப்பு நடவடிக்கை

தமிழகத்தில் ஒரே வாரத்தில் 1,155 ரவுடிகள் கைது: போலீஸார் சிறப்பு நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கொலை, கொள்​ளை, வழிப்​பறி, பெண்களுக்கு எதி​ரான குற்றங்​கள் உள்பட அனைத்து வகையான குற்​றச்​செயல்​களை​யும் முற்​றி​லும் தடுக்க அனைத்து மாவட்ட போலீ​ஸாருக்​கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் உத்​தர​விட்​டுள்​ளார்.

அதன்​படி, ரவுடிகள், சமூக விரோ​தி​கள் மற்​றும் தலைமறைவு குற்​ற​வாளி​களுக்கு எதி​ராக தமிழகம் முழு​வதும் போலீ​ஸார் சிறப்பு நடவடிக்கை மேற்​கொண்​டனர்.

கடந்த 15 முதல் 21-ம் தேதி வரை மாநிலம் முழு​வதும் 31 ஆயிரத்து 5 சரித்​திரப்​ப​திவேடு ரவுடிகள், குற்​றக் குணத்​தார் மற்​றும் குற்​றப் பின்​னணி கொண்டவர்​கள் தீவிர​மாக சோதனை செய்​யப்​பட்​டனர்.

இதில் பல்​வேறு குற்​றச்​செயல்​களில் தொடர்​புடைய 1,155 பேர் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். மேலும், பிணை​யில் வெளிவர முடி​யாத பிடி​யாணை​களை நிறைவேற்​றும் நடவடிக்​கை​யில், ஒரே வாரத்​தில் 2,906 பிடி​யாணை​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

நிலு​வை​யில் உள்ள பிடி​யாணை​களை முழு​மை​யாக நிறைவேற்​ற​வும், தலைமறை​வாக உள்ள குற்​ற​வாளி​களை கைது செய்​ய​வும் போலீ​ஸார் தொடர் நடவடிக்​கை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, பிணை நிபந்​தனை​களை மீறி மீண்​டும் மீண்​டும் குற்​றங்​களில் ஈடு​படும் நபர்​களின் ஜாமீனை ரத்து செய்ய தேவை​யான சட்ட நடவடிக்​கைகளை உடனடி​யாக மேற்​கொள்​ளு​மாறு, மாநகர காவல் ஆணை​யர்​கள், மாவட்ட எஸ்​பி-க்​கள் மற்​றும் சிறப்பு பிரிவு அதி​காரி​களுக்​கு டிஜிபி உத்​தர​விட்​டுள்​ளார்​.

தமிழகத்தில் ஒரே வாரத்தில் 1,155 ரவுடிகள் கைது: போலீஸார் சிறப்பு நடவடிக்கை
கிட்னி திருட்டு வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அருண்ராஜ் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in