Published : 11 Nov 2023 05:20 AM
Last Updated : 11 Nov 2023 05:20 AM
ராமேசுவரம்: தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட 5.70 லட்சம் பதற்ற நோய் மாத்திரைகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனர்.
தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள், பீடி இலைகள், கடல்அட்டை போன்றவற்றை இலங்கைக்குக் கடத்துவது தொடர்கிறது.
இந்நிலையில், இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தமிழகத்திலிருந்து கடத்தப்படும் பொருட்களின் பட்டியலில் மாத்திரைகளும் இடம் பிடித்துள்ளன.
நேற்று அதிகாலை தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக சில பொருட்கள் கடத்தப்படுவதாக அந்நாட்டு கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கல்பிட்டி கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
2 பேர் கைது: அப்போது, நடுக்கடலில் சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற படகை மறித்துச் சோதனையிட்டதில், 10 அட்டைப் பெட்டிகளில் பதற்ற நோய் சிகிச்சைக்குப் பயன்படக்கூடிய 5,70,000மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து, நொரோச்சோலை பகுதியைச் சேர்ந்த 2 பேரைக் கைது செய்தனர்.
மேலும், கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் சர்வதேச மதிப்பு ரூ.1.50 கோடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT