கேளம்பாக்கத்தில் 115 கிலோ குட்கா பறிமுதல்: பெட்டிக்கடைக்காரர் உட்பட 2 பேர் கைது

கேளம்பாக்கத்தில் 115 கிலோ குட்கா பறிமுதல்: பெட்டிக்கடைக்காரர் உட்பட 2 பேர் கைது
Updated on: 
1 min read

கேளம்​பாக்​கம்: படூர், கேளம்​பாக்​கம், புதுப்​பாக்​கம், சாத்​தங்​குப்​பம், தையூர் உள்​ளிட்ட பகு​தி​களில் உள்ள சிறு பெட்​டிக்​கடைகளில் குட்கா உள்​ளிட்ட புகை​யிலைப் பொருட்​கள் பதுக்கி வைத்து விற்​பனை செய்​யப்​படு​வ​தாக கேளம்​பாக்​கம் போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது.

இதையடுத்து போலீ​ஸார் அந்​தப் பகு​தி​களில் தொடர் கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர். அப்​போது வீராணம் சாலை​யில் உள்ள ஒரு பெட்​டிக்​கடை​யில் சோதனை நடத்​தினர்.

அப்​போது கடை​யில் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்த 21 கிலோ குட்கா உள்​ளிட்ட புகை​யிலைப் பொருட்​களை போலீ​ஸார் பறி​முதல் செய்​து, கடை உரிமை​யாளர் பாளை​யம் என்​பவரை பிடித்து விசா​ரணை நடத்​தினர்.

விசா​ரணை​யில், மாம்​பாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்த மணி​கண்​டன் (41) என்​பவர் தனக்கு அவற்றை வழங்கி வந்​த​தாக பாளை​யம் தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்து மணி​கண்​டனை பிடித்து போலீ​ஸார் விசா​ரித்​தனர்.

அப்​போது மணி​கண்​டன், ஆந்​தி​ரா​வுக்கு சென்று அங்​கிருந்து ரயில் மூலம் பிஸ்​கட் மற்​றும் சாக்​லேட் அடுக்கி வைக்​கப் பயன்​படுத்​தப்​படும் பெட்​டிகளில் புகை​யிலைப் பொருட்​களை மறைத்து கொண்டு வந்து விற்​பனை செய்​து​வந்​த​தாக போலீ​ஸாரிடம் தெரி​வித்​தார்.

இதையடுத்து மணி​கண்​டனிடம் போலீ​ஸார் நடத்​திய சோதனை​யில் மேலும் 94 கிலோ குட்கா உள்​ளிட்ட புகை​யிலைப் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இதையடுத்து கேளம்​பாக்​கம் போலீ​ஸார் பாளை​யம், மணி​கண்​டன் ஆகிய இரு​வரையும் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in