

சென்னை: சென்னையில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பதுக்கலைத் தடுக்க கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக குமரன் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சரண் (19), அருள் (32) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அப்துல்அலிமை (27) கைது செய்தனர். இதேபோல் புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த மிதுனை (24) கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 10.6 கிலோ கஞ்சா, போதைப் பொருளாகப் பயன்படுத்த வைத்திருந்த 1000 உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 12 சிரஞ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.