சென்னை | திருட்டு, செல்போன் பறிப்பு தொடர்பாக: சென்னையில் ஒரே வாரத்தில் 31 பேர் கைது

சென்னை | திருட்டு, செல்போன் பறிப்பு தொடர்பாக: சென்னையில் ஒரே வாரத்தில் 31 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னையில் திருட்டு, செல்போன் பறிப்பில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 25-ம் தேதி முதல் கடந்த 1-ம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் திருட்டு, செல்போன் பறிப்புதொடர்பாக 16 வழக்குகளில் தொடர்புடைய 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், செல்போன் பறிப்பு தொடர்பாக மட்டும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in