Published : 23 Aug 2023 07:15 AM
Last Updated : 23 Aug 2023 07:15 AM

மதுரையில் 6 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் இறப்பு: சடலம் தோண்டியெடுத்து விசாரணை

மர்மமாக இறந்த குழந்தையின் உடல், புதைக்கப்பட்ட இடத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுக்கும் பணி நடந்தது. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை வில்லாபுரத்தில் 6 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இதையடுத்து, புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டியெடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லாபுரம் அகஸ்தியர் தெருவைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (27), இவரது மனைவி கார்த்திகை ஜோதி(25). இவர்களுக்கு 5 வயதில் அரிமித்ரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 6 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்தது முதலே இதயப் பிரச்சினை இருந்தது. இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தனர். 3 வாரங்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுவிட்டு, மீண்டும் மதுரைக்கு வந்தனர்.

நேற்று முன்தினம் திடீரென அக்குழந்தை இறந்தது. நேற்று அதிகாலை அக்குழந்தையை புதைத்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அவனியாபுரம் போலீஸார், மதுரை தெற்கு வட்டாட்சியர் முத்துப்பாண்டி, வருவாய் ஆய்வாளர் பிருந்தா, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் குழந்தையின் உடலை தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனைக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக அவனியா புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x