தாராபுரம் அருகே மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - போக்சோவில் உறவினர்கள் இருவர் கைது

தாராபுரம் அருகே மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - போக்சோவில் உறவினர்கள் இருவர் கைது
Updated on
1 min read

உடுமலை: தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சி புதூரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (50). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாற்றுத்திறனாளி. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், உறவினரின் மகளான பள்ளி மாணவியை வீட்டு வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

அதற்காக மாத சம்பளமும் கொடுத்துள்ளார். பள்ளிக்கு சென்று திரும்பியதும், வீட்டு வேலைகளை செய்து அங்கேயே மாணவி தங்கி பள்ளி படிப்பை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு அவர் பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார். இதற்கிடையே, கல்லூரி படிப்பை மாணவி முடித்துள்ளார்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் தகாத உறவு இருப்பதை அறிந்த அண்ணன் முறை உறவினரான பிரகாஷ் என்பவரும், மாணவியை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மாணவி, தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. பாலியல் துன்புறுத்தல் அளித்த இருவரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்ற ஆஜருக்கு பின் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மாணவிக்கு உளவியல் ஆலோசனையும், பாதுகாப்பு குறித்தும் போலீஸார் ஆலோசனை வழங்கினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in