சென்னை | தானமாக வழங்கிய இடத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.12 கோடி மோசடி: ஓட்டல் உரிமையாளர் உட்பட 8 பேர் கைது

தானமாக வழங்கிய இடத்தை அடமானம் வைத்து ரூ.12 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள்.
தானமாக வழங்கிய இடத்தை அடமானம் வைத்து ரூ.12 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள்.
Updated on
1 min read

சென்னை: தானமாக வழங்கப்பட்ட இடத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.12 கோடி மோசடி செய்ததாக ஓட்டல் உரிமையாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூர்கிராம பஞ்சாயத்துக்கு பொது மக்கள் உபயோகத்துக்காக தானமாக வழங்கப்பட்ட இடத்தை பொதுஅதிகார முகவர்கள் மூலம் வாங்குவதுபோல் காண்பித்து அவற்றை சென்னை கொளத்தூரில் உள்ள வங்கியில் அடமானம் வைத்து ரூ.12 கோடி வரை மோசடி செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, வங்கிமோசடி தடுப்பு பிரிவு போலீஸார்வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மோசடியில் ஈடுபட்டது ஆதனூரைச் சேர்ந்த மாலா (51), கூடுவாஞ்சேரி பாலசுப்ரமணியன் (47), அம்பத்தூர் விக்னேஷ் (32), கொரட்டூர் முத்துச்செல்வன் (44), இவரது மனைவி சிவரஞ்சனி (37), கொரட்டூர் சங்கரேஸ்வரி (40), அவரது கணவர் சீனிவாசன் (46), கேரளாவைச் சேர்ந்த சிவராஜ் (41) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் தங்கள் ஓட்டலில் வேலை செய்யும் விக்னேஷ் என்பவர் பெயரில் இடத்துக்கான பொது அதிகாரம் பெற்று அவரிடமிருந்து வாங்குவதுபோல் பத்திரப்பதிவு செய்துள்ளனர். மேலும் 2020-ம் ஆண்டு கரோனா காலத்தின்போது வங்கிகளில் தொழில் வளர்ச்சிக்கு கடன் கொடுப்பதை அறிந்து வங்கிகளில் மோசடி செய்யும் நோக்கில்ஆதனூர் பஞ்சாயத்துக்கு தானமாகவழங்கப்பட்ட இடத்தை பிளாட் போட்டு அதை தங்கள் இடம்என குறிப்பிட்டு அதை வங்கிகளில்அடமானமாக வைத்து ரூ.12கோடி வரை பெற்று மோசடி செய்ததை கண்டுபிடித்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in