

கோவை: கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயகுமார் கடந்த 7-ம் தேதி, தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக, ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, டி.ஐ.ஜி விஜய குமார் தற்கொலை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதில் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக கருத்துகளை தெரிவித்திருந்த 2 நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், யூ.டி.யூ.ப் சேனல் உரிமையாளர் ஒருவர், பேச்சாளர்கள் 4 பேர் என 7 பேருக்கு ராமநாதபுரம் போலீஸார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்படி, பத்திரிகையாளர் உள்ளிட்ட இருவர் நேற்று ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் முன்பு நேரில் ஆஜராகினர். சில மணி நேர விசாரணைக்கு பின்னர் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.