கோயில் ‘முதல் மரியாதை’க்கு மோதல்: மதுரையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ, திமுக கிளை செயலர் உட்பட 6 பேர் கைது

கோயில் ‘முதல் மரியாதை’க்கு மோதல்: மதுரையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ, திமுக கிளை செயலர் உட்பட 6 பேர் கைது
Updated on
1 min read

மதுரை: கோயில் திருவிழா, முதல் மரியாதை பிரச்னையில் நடந்த மோதலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ, திமுக கிளைச் செயலர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம், அன்றைய சமயநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம். சில நாளுக்கு முன்பு இவரது சொந்த ஊரில் நடந்த கோயில் திருவிழாவில் முதல் மரியாதை பிரச்னை எழுந்தது. இது தொடர்பாக இரு தரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது. எம்.சத்திரபட்டி போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இரு தரப்பினருக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு, 24-ம் தேதி இரவு இரு கோஷ்டியாக மோதிக் கொண்டனர். சுப்பையா (65), சூரியா (23), பழனிக்குமார் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து கருவனூரிலுள்ள முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலத் தின் வீடு ஜன்னல்கள் நொறுக்கப்பட்டன. இரு சக்கர, காருக்கு தீ வைப்பு சம்பவம் நடந்தது.

இச்சம்பவம் குறித்து பொன்னம்பலம் மருமகள் வசந்த கோகிலா கொடுத்த புகாரின்பேரில், திமுக 4-வது வார்டு கிளைச் செயலர் வேல்முருன் (38), அருண் (22), திருப்பதி உள்ளிட்ட 15 பேர் மீதும்,வேல்முருகன் தரப்பு கொடுத்த புகாரின்பேரில் பொன்னம்பலம், அவரது மகன்கள் மீதும் சத்திரபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இவர்களில், முன்னாள் எம்எல்ஏ பொன்னம் பலம் (65), மகன்கள் திருச்சிற்றம்பலம் (45), தில்லையம் பலம் (42) மற்றொரு தரப்பில் வேல்முருகன்(40), செந்தமிழன் (35), அவரது சகோதரர் ராஜ்மோகன் (33) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in