தமிழகத்தில் 542 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் 542 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 283, பெண்கள் 259 என மொத்தம் 542 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 116 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 36 லட்சத்து 3,805 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 62,183 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 432 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 3,563 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னை, காஞ்சி புரத்தில் தலா ஒருவர் உயிரி ழந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in