700-ஐ நெருங்கும் பாதிப்பு | தமிழகத்தில் புதிதாக 692 பேருக்கு கரோனா

700-ஐ நெருங்கும் பாதிப்பு | தமிழகத்தில் புதிதாக 692 பேருக்கு கரோனா
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 367, பெண்கள் 325 என மொத்தம் 692 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 306 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 60,874 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 19,326 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 243 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 3,522பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 596 ஆகவும், சென்னையில் 295 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் கரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 12,899பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 72,474பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in