மக்கள் ஊரடங்குக்கு மத்தியில் திருமணம்: பெற்றோர்கள் உட்பட 8 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்

திருமணத்திற்கு யாரும் வராததால், காலியாக காட்சியளித்த திருமண மண்டபம்
திருமணத்திற்கு யாரும் வராததால், காலியாக காட்சியளித்த திருமண மண்டபம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் 8 பேர் மட்டும் கலந்துகொண்டனர். மக்கள் ஊரடங்கு காரணமாக திருமண நிகழ்ச்சிக்கு யாரும் வராததால் மணப்பெண், மாப்பிள்ளையின் பெற்றோர்கள், சகோதரர்கள் 8 பேர் மட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் இன்று (மார்ச் 22) மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் பேருந்துகள், லாரி, ஆட்டோ, டாக்ஸி போன்ற எந்த வாகனமும் இயங்கவில்லை. கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரியில் 8 பேர் மட்டுமே கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி சின்ன மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த சரத் என்பவருக்கும், கிருஷ்ணகிரி மனியாண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரேவதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதால் இன்று திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று மக்கள் ஊரடங்கு காரணமாக, உறவினர்கள் யாரும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. மணப்பெண்ணின் பெற்றோர் மற்றும் மணமகனின் பெற்றோர் என மொத்தம் 8 பேர் மட்டும் இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மக்கள் ஊரடங்குக்கு மத்தியில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி, மணமகன் மற்றும் மணமகளுக்கு வித்தியாசமான நிகழ்வாக அமைந்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in