ஈ​ரானிய இயக்​குநர் ஜாஃபர் பனாஹிக்கு ஓராண்டு சிறை!

ஈ​ரானிய இயக்​குநர் ஜாஃபர் பனாஹிக்கு ஓராண்டு சிறை!
Updated on
1 min read

அரசுக்கு எதி​ரான பிரச்​சார நடவடிக்​கை​களில் ஈடு​பட்​ட​தாகக் கூறி பிரபல ஈரானிய இயக்​குநர் ஜாஃபர் பனாஹிக்கு அந்​நாட்டு அரசு, ஒரு வருடம் சிறைத் தண்​டனை விதித்​துள்​ளது.

உலக அளவில் கவனிக்​கப்​படும் ஈரானிய பட இயக்​குநர், ஜாஃபர் பனாஹி. கேன்ஸ் திரைப்பட விழா​வில் தங்​கப்பனை விருது பெற்ற ‘இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்​ஸிடன்ட்’, பெர்​லின் சர்வதேசப்பட விழா​வில் தங்​கக்​கரடி விருது பெற்ற ‘டாக்​ஸி’, வெனிஸ் பட விழா​வில் தங்​கச் சிங்​கம் விருது பெற்ற ‘த சர்க்​கிள்’ உள்பட பல படங்​களை இயக்​கி​யிருக்​கிறார்.

இவர், அரசுக்கு எதி​ரான நடவடிக்​கைகளில் ஈடு​பட்​ட​தாகக் கூறி, ஒரு வருட சிறைத் தண்​டனை​யும் 2 ஆண்டு பயணத்​தடையை​யும் ஈரான் அரசு விதித்​துள்​ளது. இதை எதிர்த்து மேல் முறை​யீடு செய்​வோம் என்று அவருடைய வழக்​கறிஞர் முஸ்​தபா நிலி தெரிவித்துள்​ளார்.

அரசுக்கு எதி​ரான பிரச்​சார நடவடிக்​கை​களில் ஈடு​பட்​ட​தாகக் கூறி இத்​தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ள​தாகத் தெரி​வித்​துள்ள வழக்​கறிஞர், அவர் தற்​போது வெளி​நாட்​டில் இருப்​ப​தாக​வும் கூறியுள்​ளார். அரசுக்கு எதி​ராகத் திரைப்​படங்​களை உருவாக்கியதாக 2009-ம் ஆண்டு முதல் பல முறை பனாஹி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈ​ரானிய இயக்​குநர் ஜாஃபர் பனாஹிக்கு ஓராண்டு சிறை!
பட்டாபி கதாபாத்திரத்தின் காரணகர்த்தாக்கள் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 9

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in