புதுவையில் 3-வது உலக திரைப்பட திருவிழா: ஆக.7 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது

புதுவையில் 3-வது உலக திரைப்பட திருவிழா: ஆக.7 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் 3வது உலகத் திரைப்பட விழா நாளை தொடங்குகிறது. இதில் 10 நாடுகளைச் சேர்ந்த பத்து மொழி படங்களை இலவசமாக பார்க்கலாம்.

புதுவை திரை இயக்கம், அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் நிறுவனத்துடன் இணைந்து 3வது உலக திரைப்பட விழாவை நடத்துகிறது. அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் கருத்தரங்கு கூடத்தில் நாளை தொடங்கி 9-ம் தேதி வரை 3 நாட்கள் திரைப்பட விழா நடக்கிறது. நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடக்கவிழா நடக்கிறது.

திரைப்படவிழா தொடர்பாக புதுச்சேரி திரை இயக்க செயலர் ரவிசந்திரன் கூறியதாவது: தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் நாளை மாலை விழாவை அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் திரை அரங்கில் தொடங்கி வைக்கிறார்.

விழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, கொலம்பியா, இலங்கை, இந்தியா, ஈரான், துனிசியா, தென்கொரியா, சீனா நாடுகளை சேர்ந்த 10 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

நாளை இரவு 7 மணிக்கு தி ஸ்ட்ரேஞ்சர் (பிரான்ஸ்), ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 9.30 மணிக்கு

தி பீபி ஃபைல்ஸ் (The Bibi Files) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பற்றிய அமெரிக்க ஆவணப்படம் , ‘முக்கியத் திருப்பத்தில் சுயாதீன சினிமா’ என்ற தலைப்பில் பகல் 12 மணிக்கு இயக்குநர்கள் ஹரிஹரன், சிவக்குமார் மோகனன், சோமீதரன் பங்கேற்கும் சிறப்பு வகுப்பு பகல் 12 மணிக்கு நடக்கும்.

மதியம் 2.15 மணிக்கு அம்ரும் ஜெர்மன் திரைப்படமும், மாலை 4.30 மணிக்கு கொலம்பியாவின் "ஏ பொயட்" திரைப்படமும், இரவு 7 மணிக்கு ‘நீலீரா’ தமிழ் திரைப்படமும் திரையிடப்படும்.

9-ம் தேதி காலை பெங்காலி திரைபப்டம் ‘மேகே டாக்கா தாரா’ காலை 9.30 மணிக்கு திரையிடப்படும். பகல் 12.15 மணிக்கு ஈரான் திரைப்படம் ‘டெரஸ்டரியல் வெர்சஸ்’ திரையிடப்படும், மதியம் 2. 30 மணிக்கு துனிசியா திரைப்படம் ‘தி வாய்ஸ் ஆப் கின்ட் ராஜாப்’ திரையிடப்படும், மாலை 4.30 மணிக்கு தென்கெரியா திரைப்படம் ‘பை த ஸ்ட்ரீம்’, இரவு 7.15 மணிக்கு சீன திரைப்படம் ‘தி சன் ரைசஸ் ஆன் அஸ் ஆல்’ திரையிடப்படும் என்றார்.

புதுவையில் 3-வது உலக திரைப்பட திருவிழா: ஆக.7 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது
“தமிழக வேளாண் பட்ஜெட் திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட ‘வெற்றி’ லேபிள்” - மு.க.ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in