“தமிழக வேளாண் பட்ஜெட் திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட ‘வெற்றி’ லேபிள்” - மு.க.ஸ்டாலின்

“தமிழக வேளாண் பட்ஜெட் திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட ‘வெற்றி’ லேபிள்” - மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: “திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று தவெக அரசு நினைக்கிறதா?” என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில், வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் தமிழக வேளாண் பட்ஜெட். மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.

திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா? குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா விவசாயிகளுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் பட்ஜெட் அமைந்திருக்கிறது.

விவசாய பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழக வேளாண் பட்ஜெட் திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட ‘வெற்றி’ லேபிள்” - மு.க.ஸ்டாலின்
‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம்’ - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in