

யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
தேவ் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’. யோகி பாபு நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்கள் கழித்து இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார் யோகிபாபு. இதனை அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.
முந்தைய யோகி பாபு படங்கள் போல் அல்லாமல், பழைய வாகனங்கள் விற்பதில் நடக்கும் மோசடிகள் பற்றியும், அந்த மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளைப் பற்றியும், இனி பழைய வாகனங்களை வாங்கவிருக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும் என்கிறது ’அர்ஜுனன் பேர் பத்து’ படக்குழு. இதில் யோகி பாபுவுக்கு நாயகியாக அனாமிகா மகி நடித்துள்ளார்.
மேலும் மேலும் காளி வெங்கட், அருள்தாஸ், அயலி மதன், சுப்பிரமணியன் சிவா, மைனா நந்தினி, சவுந்தர்யா, சென்ராயன், ஹலோ கந்தசாமி, பாவா லட்சுமணன், ரஞ்சன் குமார், இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் முழு படப்பிடிப்பும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
இதன் ஒளிப்பதிவாளராக பிரதீப் காளிராஜா, இசையமைப்பாளராக இமான், எடிட்டராக காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.