காதல் கதையாக உருவாகும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ - டீசர் வெளியீடு

காதல் கதையாக உருவாகும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ - டீசர் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: டி. ஆண்டனி இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தனிமையில் வளர்ந்து, மதுவுக்கு அடிமையாக இருளில் வாழும் ஒரு இளைஞனின் வாழ்க்கைக்குள் காதல் நுழையும் போது ஏற்படும் மாற்றமே இப்படத்தின் மையக்கரு என்று படக்குழு தெரிவிக்கிறது. இன்றைய தலைமுறையினரின் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், காதலின் மென்மையையும் வாழ்க்கையின் வலியையும் பேசுகிறது.

இந்த முழுத் திரைப்படமும் 'லைவ் சவுண்ட்' தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அனைத்துப் பாடல்களும் நேரடி இசைக்கருவிகளைக் கொண்டே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆண்டனி’ஸ் அடெலியர் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் டி.ஆண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவையும், ஜெய்கார் ஹரிநாத் - அசோக் ஸ்ரீதரன் பாடல்களுக்கான இசையையும், ஜோயி ரிடா பின்னணி இசையையும் கவனிக்கின்றனர். தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 21-ஆம் தேதி இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

காதல் கதையாக உருவாகும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ - டீசர் வெளியீடு
“கரப்பான்பூச்சிகளைப் போல தூக்கி எறிய வேண்டும்” - ‘சக்திமான்’ முகேஷ் கண்ணா பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in