‘வித் லவ்’
பிப்.6-ம் தேதி ‘வித் லவ்’ வெளியீடு
‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகமாகும் ‘வித் லவ்’ திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் படம் ‘வித் லவ்’. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
’டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்த மதன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் அபிஷன் ஜீவந்த், அனஸ்வரா ராஜன் ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நவீன இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
