முடிவுக்கு வருமா ‘ஜனநாயகன்’ வெளியீட்டு சர்ச்சை?

முடிவுக்கு வருமா ‘ஜனநாயகன்’ வெளியீட்டு சர்ச்சை?
Updated on
1 min read

’ஜனநாயகன்’ வெளியீட்டு சர்ச்சை முடிவுக்கு வருமா என்று விநியோகஸ்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. ஜனவரி 9-ம் தேதி வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்ட இப்படம் தணிக்கை பிரச்சினையில் சிக்கியது. இதனால் இப்போது வரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல், வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படாமல் உள்ளது. மேலும், சில தினங்களுக்கு முன்பு இப்படம் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது தமிழக தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் தவெக தலைவர் விஜய். இதனை முன்வைத்து ‘ஜனநாயகன்’ தணிக்கை சர்ச்சை முடிவுக்கு வரும் என விநியோகஸ்தர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஏனென்றால் முன்பணம் கொடுத்து நீண்ட மாதங்கள் ஆவதால், சீக்கிரம் வெளியிட்டு ஆக வேண்டிய சூழலுக்கு தயாரிப்பு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக முதல்வராக விஜய் பதவியேற்க இருப்பதால் ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரியளவில் வசூல் இருக்கும் எனவும் விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர். முன்னதாக இணையத்தில் வெளியானாலும், தற்போதுள்ள சூழலில் அது வசூலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் கருதுகிறார்கள்.

முடிவுக்கு வருமா ‘ஜனநாயகன்’ வெளியீட்டு சர்ச்சை?
தவெகவின் ‘இன்ஸ்டன்ட்’ வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம் - பெரிய கட்சிகளை காவு வாங்கிய ‘அல்காரிதம்’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in