‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்?

‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்?
Updated on
1 min read

விஜய் – த்ரிஷா நடித்து 2005-ம் ஆண்டு வெளி​யான திரைப்​படம், ‘திருப்பாச்சி’. பேரரசு இயக்கி இருந்​தார். சூப்​பர் ஹிட் வெற்றி பெற்ற இந்​தப் படம் 21 ஆண்​டு​களுக்​குப் பிறகு அக்​.1-ம் தேதி மீண்டும் வெளி​யாக இருப்​ப​தாக அறிவிக்​கப்​பட்​டது.

விஜய்- த்ரிஷா நடித்த ‘கில்​லி’ மறு​வெளி​யீட்​டிலும் வசூல் சாதனைப் படைத்​த​தால் இந்​தப் படத்​துக்​கும் எதிர்​பார்ப்பு இருந்தது. இந்​நிலை​யில் இதன் மறு​வெளி​யீடு ஒத்தி வைக்கப்பட்டுள்​ளது. விஜய் மகன் ஜேசன் சஞ்​சய் இயக்​கிய ‘சிக்மா’ திரைப்​படம் அக்​.2-ம் தேதி வெளி​யாகிறது.

இதில் சந்​தீப் கிஷன், ஃப்ரியா அப்​துல்​லா, ராஜு சுந்​தரம், சம்​பத் ராஜ் உள்பட பலர் நடித்​துள்​ளனர். இந்​தப் படத்துக்காக திருப்பாச்சி ரீ-ரிலீஸ் தற்​போது தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுபற்றி இப்​படத்தை வெளி​யிடும் திருப்​பதி பிக்​சர்ஸ் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “தற்​போதைய சூழலில், பல புதிய திரைப்​படங்​கள் திரைக்கு வர உள்​ள​தால், அந்​தப் படைப்​பு​களை ஊக்​குவிக்​க​வும், தமிழ்த் திரை​யுல​கின் சீரான வளர்ச்​சிக்கு வழிவிட​வும், ‘திருப்​பாச்​சி’ படத்​தின் மறு​வெளி​யீட்​டைச் சிறிது காலத்​துக்கு ஒத்​திவைக்க முடிவு செய்​துள்​ளோம்” என தெரிவிக்கப்​பட்​டுள்​ளது.

‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்?
‘டாய்ரா’ முதல் ‘சண்டக்காரி’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் பட்டியல்
‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்?
Sarvam Maya: டெலுலுவின் துணையும், ஆன்மாக்கள் தரும் ஆறுதலும் | திரை தேவதைகள் 35

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in