தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது ஏன்? - ‘29’ விழாவில் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது ஏன்? - ‘29’ விழாவில் லோகேஷ் கனகராஜ் விளக்கம்
Updated on
1 min read

‘மேயாதமான்’, ‘ஆடை’, ‘குலுகுலு’ ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ள ‘29’ என்ற படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் மே 8-ம் தேதி வெளியிடுகிறது.

இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் பி.எஸ்.வினோத் ராஜ், கார்த்திக் யோகி, அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, ராஜசேகர பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ஆர்ஜே பாலாஜி, ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, “இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கு முழு காரணம் ரத்னகுமார்தான். 2013-ம் ஆண்டில் முதல் படத்தை இயக்குவதற்காக அலைந்து கொண்டிருந்த போது, இங்கு இப்போது இருக்கும் எல்லா இயக்குநர்களும் ஒன்றாகத் தான் சுற்றிக் கொண்டிருந்தோம். 2012-ம் ஆண்டில் வெளியான ‘பீட்சா’ படம்தான் எங்கள் கனவுகளுக்கு மிகப்பெரிய கதவைத் திறந்து வைத்தது.

ரத்னகுமார் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து நானும் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்று இருக்கிறேன். நான் தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணம், நாம் வளரும்போது நம்முடன் இருந்தவர்களையும் வளர்த்து விட வேண்டும் என்பதற்காகத் தான். இதற்கு இன்ஸ்பிரேஷன் கமல் சார். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அவர்தான் சொல்லிக் கொடுத்தார். நான் இதுவரை இந்தப் படத்தைப் பார்க்கவும் இல்லை. கதையை கேட்கவும் இல்லை. ரத்னகுமார் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் காரணம்” என்றார்.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது ஏன்? - ‘29’ விழாவில் லோகேஷ் கனகராஜ் விளக்கம்
‘கர’ விமர்சனம்: தனுஷ் + விக்னேஷ் ராஜா கூட்டணி சாதித்ததா, சறுக்கியதா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in