

புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட நாட்களில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு ரசிகர்கள் வருவது வழக்கம். அதன்படி பொங்கலை முன்னிட்டு அவருடைய போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு ஏராளமான ரசிகர்கள் கூடினர். அவர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் கூறும்போது, “இந்த பொங்கல் விவசாயிகளுக்கான பொங்கல். விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோஷமாக இருந்தால் தான் மற்றவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும்” என்றார்.
ஜெயிலர் 2 படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் பற்றிய அப்டேட் கேட்டபோது, “சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கும் படம் ஏப்ரலில் தொடங்கும். அது பொழுதுபோக்குடன் கூடிய கமர்ஷியல் படமாக இருக்கும்” என்றார்.