இசை​யில் எப்​போது மேஜிக் நிகழும்? - ஜி.வி.பிரகாஷ் குமார் விளக்​கம்

இசை​யில் எப்​போது மேஜிக் நிகழும்? - ஜி.வி.பிரகாஷ் குமார் விளக்​கம்
Updated on
1 min read

சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா உள்பட பலர் நடித்​துள்ள படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. வெங்கி அட்லூரி இயக்​கி​யுள்ள இப்​படத்தை சித்​தாரா என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் தயாரித்​துள்​ளது. ஆக.14-ல் வெளி​யான இப்​படத்​துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்​துள்​ளார். இப்​படம் வரவேற்​பைப் பெற்று வரு​வதை அடுத்து படக்​குழு​வினர் செய்​தி​யாளர்​களை சந்​தித்​தனர்.

இதில் சுனில் ரெட்​டி, ராதிகா சரத்​கு​மார், பவானி , மமிதா பைஜூ, இயக்​குநர் வெங்கி அட்​லூரி கலந்து கொண்​டனர். இசையமைப்​பாளர் ஜி.​வி.பிரகாஷ் குமார் பேசும்​போது, “இயக்குநர் வெங்கி அட்​லூரி​யுடன் ‘வாத்​தி’ படத்​தில் முதன் முதலாக இணைந்​தேன். அந்​தப் படம் மிகப்​பெரிய அளவில் வெற்​றியைப் பெற்​றது. அதற்​குப் பிறகு அவருடன் ‘லக்கி பாஸ்​கரி’ல் பணி​யாற்​றினேன். அந்​தப் படமும் மிகப்​பெரிய வெற்​றியை பெற்​றது. தொடர்ந்து 3 வது முறை​யாக ‘விஸ்​வ​நாத் அண்ட் சன்​ஸ்’ திரைப்​படத்​தில் இணைந்​தேன். 3 படங்​களும் வெற்றி பெற்​று, ஹாட்​ரிக் அடித்​திருக்​கிறார்.

‘வாத்​தி’ திரைப்​படத்​தின் பாடல் - தமிழ், தெலுங்கு என இரண்டு மாநிலங்​களி​லும் வெற்றி பெற்​றது. இதற்​காக எனக்கு தேசிய விருதும் கிடைத்​தது. அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் இருந்து ஏராள​மான வாய்ப்​பு​கள் வந்​தது. இதற்கு வெங்கி தான் காரணம். இந்​தப்​படம் வெளி​நாடு​களிலும் மிகப்​பெரிய வெற்​றியை பெற்​றிருக்​கிறது. ஆந்​தி​ரா​வில் சூர்யா நடித்த படத்​தின் வசூல் புதிய சாதனையை படைத்​திருக்​கிறது. இது சந்​தோஷ​மாக இருக்​கிறது.

சூர்யா அடுத்​தடுத்து இரண்டு பிளாக் பஸ்​டர் ஹிட் படங்​களை கொடுத்​திருக்​கிறார். மூன்​றாவது திரைப்​படத்​தை​யும் விரை​வில் வழங்​கு​வார்.

இந்​தப் படத்​துக்​காக, இறு​திக்​கட்​டத்​தில் மூன்றே நாட்​களில் 2 பாடல்​களை உரு​வாக்​கினோம். அந்​தப் பாடல்​கள் தான் தற்​போது மிகப்​பெரிய வெற்​றியை பெற்​று, அனை​வ​ராலும் பகிர்ந்து கொள்​ளப்​படு​கிறது. மேஜிக் மொமென்ட்​ஸ் எப்​போது வரும் என்று தெரி​யாது. இசை​யில் எப்​போது வேண்​டுமென்​றாலும்​ அந்த மேஜிக்​ நிகழும்’’ என்​றார்​.

இசை​யில் எப்​போது மேஜிக் நிகழும்? - ஜி.வி.பிரகாஷ் குமார் விளக்​கம்
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரொமோ வெளியீடு!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in