‘மது​விலக்​குக்கு பிறகு நாடு எப்படியிருக்​கும்?’ - இயக்குநர் விவரிப்பு

இயக்குநர் பிரபு ராம் | நல்லபடம் போஸ்டர்

இயக்குநர் பிரபு ராம் | நல்லபடம் போஸ்டர்

Updated on
1 min read

மது​விலக்கு அறிவிக்​கப்​பட்ட பிறகு நாடு எப்​படி​யிருக்​கும் என்பதை மைய​மாக வைத்து உரு​வாகி இருக்​கும் திரைப்​படம், ‘நல்லபடம்’. சி.பிரபு ராம் இயக்​கி​யுள்ள இப்​படத்​தில் டாக்​டர் ஹரிஷ் நாயக​னாக​வும் தனலட்​சுமி நாயகி​யாக​வும் நடித்துள்ளனர்.

மொட்டை ராஜேந்​திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்​ஷினி உள்பட பலர் நடித்​துள்ள இப்​படத்தை ஹரிஷ் சினிமாஸ் சார்​பில் அழகு பாண்​டியன் தயாரித்​துள்​ளார்.

சசிகு​மார் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு சகிஷ்னா சேவியர் இசை அமைத்​துள்​ளார்.

செப்​.18-ம் தேதி வெளி​யாகும் இப்​படம் பற்றி இயக்​குநர் பிரபு ராம் கூறும்​போது, “மது​விலக்கு அறி​வித்​தால் நாடு எப்​படி​யிருக்​கும் என்​பது​தான் இதன் கதை.

மக்கள் ஒவ்​வொரு​வரிட​மும் போய் ‘திருந்​துங்க’ என்று சொல்வதைவிட, அரசு நினைத்​தால் ஒரே ஆணை​யில் மதுவிலக்கைக் கொண்டு வர முடி​யும். அரசே கொடுத்​து​விட்​டுக் குடிக்​காதீர்​கள் என்று சொல்​வ​தில் என்ன நியா​யம் இருக்​கிறது? என்​பதை வைத்து இப்​படம் உரு​வாகி ​உள்​ளது.

மது பழக்​கம் கொண்ட நாயகன், நண்​பர்​களு​டன் அதற்​கான சங்கம் ஒன்றை ஆரம்​பித்து ரகளை​யாக இருக்​கிறார். மது விலக்கு வந்த பிறகு அவர் வாழ்க்​கை​யில், நாட்​டில் உள்ள குடும்பங்களிலும் என்ன நடக்​கிறது என்​ப​தைச் சொல்​கிறோம். நகைச்​சுவை, காதல், சென்​டிமென்ட் மற்​றும் சமூகக் கருத்​தைக் கொண்ட படமாக உரு​வாக்கி இருக்​கிறோம்” என்​றார்.

<div class="paragraphs"><p>இயக்குநர்&nbsp;பிரபு ராம் |&nbsp;நல்லபடம் போஸ்டர்</p></div>
Sarvam Maya: டெலுலுவின் துணையும், ஆன்மாக்கள் தரும் ஆறுதலும் | திரை தேவதைகள் 35

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in