

ஜனநாயகன் தயாரிப்பாளரான கே.வி.என் புரொடக்ஷன்ஸின் வெங்கட் கே.நாராயணா, திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறும்போது, “’ஜனநாயகன்’ பற்றிப் பேசுவதற்கான இடம் இதுவல்ல. நான் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தேன். ஆனால் ஏற்கெனவே சொன்னது போல, தணிக்கைச் சான்றிதழ் வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் விரைவில் வழங்குவார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் படத்தை கூடிய விரைவில் வெளியிடுவோம்.
தணிக்கைச் சான்றிதழ் கிடைத்ததும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். படம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்படும். விஜய் சார் தமிழ்நாட்டின் ஜனநாயகனாக, முதலமைச்சராக மாறியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது” என்று வெங்கட் கே. நாராயணா கூறினார். ஹெச். வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.