5 டைரக்டர்கள் உருவாக்கிய ‘வவ்வல்ஸ்’

5 டைரக்டர்கள் உருவாக்கிய ‘வவ்வல்ஸ்’
Updated on
1 min read

யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்​யுக்தா விஸ்​வ​நாதன், ராஜ் அய்​யப்​பா, தீபக் பரமேஷ் உள்​ளிட்​ட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘வவ்வல்ஸ்; அன் அட்​லஸ் ஆஃப் லவ்’.

5 கதைகளைக் கொண்ட இப்​படத்தை திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்​தோஷ் ரவி மற்​றும் ஜெகன் ராஜேந்​திரன் ஆகிய 5 இயக்​குநர்​கள் இயக்​கி​யுள்​ளனர். ராஜு ஷெரேகர் தயாரித்​துள்ள இப்​படம் மார்ச் 13-ல் வெளியாகிறது. இதன் இசை வெளி​யீட்டு விழா சென்னையில் நடை​பெற்​றது.

நடிகர் யூகி சேது பேசும்​போது, “மிமிக்​ரி​யில் இருந்து நடிகரானவர் சின்னி ஜெயந்த். அந்த டிரெண்டை முதலில் ஆரம்​பித்து வைத்​தவர் அவர்​தான். காதலைப் பற்றி நிறைய விஷ​யங்​கள் இந்​தப் படத்​தில் பேசி​யிருக்​கிறோம். இசையமைப்​பாளர், ஒளிப்​ப​தி​வாளர், படத்​தொகுப்​பாளர் என அனை​வரும் சிறப்​பாக பணிபுரிந்​துள்​ளனர்.

குறும்​படங்​களும் சினி​மா​வில் வெற்றி பெற முடி​யும் என்பதற்கு முன்​னு​தா​ரண​மாக இந்​தப் படம் இருக்​கும் என நம்​பு​கிறேன்” என்றார். படத்தை வெளி​யிடும் விநியோகஸ்தர் ஹரி உத்ரா கூறும்​போது, “அடல்ட் மற்​றும் வன்​முறை நிறைந்த படங்​களே இப்​போது அதி​கம் வருகின்றன. உணர்​வுப்​பூர்​வ​மாக சரி​யான படத்தை எடுக்கும் இயக்​குநர்​கள் இன்று குறைவு. அதை இந்த ஐந்து இயக்​குநர்​களும் சரி​யாகச் செய்​திருக்​கிறார்​கள்​” என்​றார்​.

5 டைரக்டர்கள் உருவாக்கிய ‘வவ்வல்ஸ்’
“கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை முடிவாகிவிட்டது” - பழனிசாமி அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in